states

img

ராமர் கோவில் திறப்பு விழா செலவு ரூ.113 கோடி

அயோத்தி, ஆக. 26 - அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22 நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு ரூ. 113 கோடி செலவானதாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கோவில் கட்டுமானத்திற்கு இதுவரை ரூ. 1800 கோடி வரை செலவிட்டுள்ளதாகவும், அடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ள கட்டு மானப் பணிகளுக்குக் கூடுதலாக ரூ. 670 கோடி வரை தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், 2023-24 நிதியாண்டில் மொத்த செலவு ரூ. 676 கோடி என்றும், மொத்த வருவாய் ரூ. 363.34 என்றும்  கூறியுள்ளது. இதில் ரூ. 204 வங்கி வட்டித் தொகையாக வும், ரூ. 58 கோடி நன்கொடையாகவும் கிடைத்ததாக வும் குறிப்பிட்டுள்ளது.